தமிழோவியம் - ஈரோடு தமிழன்பன்

இயல் ஒன்று கவிதைப் பேழை தமிழோவியம் - ஈரோடு தமிழன்பன் நுழையும்முன் : என்றென்றும் நிலைபெற்ற தமிழே! தோற்றத்தில் தொன்மையும் நீதான்! தொழில்நுட்பத்தை ஏற்ற புதுமையும் நீதான்! அறியும் இலக்கணம் தந்ததும் நீதான்! அரிய இலக்கணம் கொண்டதும் நீதான்! காலந்தோறும் உன்னைப் புதுப்பித்துக் கொண்டு கணினித் தமிழாய் வலம் வருகிறாய்! ஆதிமுதல் எல்லாமுமாய் இலங்குகிற உன்னைத் தமிழோவியமாகக் கண்டு மகிழ்கிறோம்! காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே! எந்தக் காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே! அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள் அவை அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள் நிகரிலாக் காப்பியப் பூவனங்கள் உண் நெஞ்சம் நடத்தட்டும் ஊர்வலங்கள்! - காலம் பிறக்கும் முன்..... ஏனிவ் விருட்டெனக் கேட்டுவரும் - நீதி ஏந்திய தீபமாய்ப் பாட்டுவரும் மானிட மேன்மையைச் சாதித்திடக் குறள் மட்டுமே போதுமே ஓதி, நட... ...